June 8, 2015

The Death of Ivan Ilyich -Leo Tolstoy: சாகா வரம் போல் சோகம் உண்டோ?

நீதிபதியாக பணியாற்றிய இவான் இலியச், நோயுற்று பல நாட்கள் படுக்கையில் கிடந்த பிறகு, ஒருநாள் இறந்துபோன செய்தி, அலுவலக நண்பர்களுக்குத் தெரியவருகிறது. அப்போது அவர்களிடையே நிலவும் எண்ணச் சிதறல்களை, “Besides considerations as to the possible transfers and promotions likely to result from Ivan Ilyich's death, the mere fact of the death of a near acquaintance aroused, as usual, in all who heard of it the complacent feeling that, "it is he who is dead and not I." Each one thought or felt, "Well, he's dead but I'm alive!" என்பதாக காட்சிப்படுத்துகிறார் டால்ஸ்டாய். வாழ்வின் நிலையாமை தத்துவத்தை ஒருபோதும் நம்முடைய வாழ்க்கையிலிருந்து பெறுவதில்லை மறாக பிறர் மரணத்திலிருந்தே நாம் பெற்றுக்கொள்கிறோம். இவான் இலியச்சின் மரணம் அவரது நண்பர்களுக்கு அவர்களுடைய மரணத்தை நினைவுபடுத்துவதற்கு மாறாக, அவரது இடத்தில் நிகழப்போகும் பதவி உயர்வையும், மாறுதல்களையுமே பெரிதும் உணர்த்துவது, மனிதர்கள் அனைவரும் தங்களின் வாழ்வை நிலையானதாக உணர்வதால் எழும் மனமயக்கு என்பதை கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிச் செல்லும் டால்ஸ்டாய், அதன் பிறகான கதையில் இலியச்சின் மரணத்தில் நம்மை முழுமையாக தள்ளிவிட்டுச் செல்கிறார்.

தான் மரணப் படுக்கையில் கிடப்பது, நடமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு சகிக்க முடியாததாக, அவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூராக இருப்பதாக, உணரும் இவான் இலியச் அதன் காரணமாக அவர்கள் மீது வெறுப்புகொண்டு, முடிந்தவரை தனிமையில், தன்னுடைய வலியோடும் சிந்தனைகளோடும் மட்டுமே இருந்துகொண்டிருக்கிறார். குழந்தைப் பருவம், வாலிபப் பருவம் என அவரது எண்ணங்கள் அவரை கடந்த காலத்திற்கு கொண்டுசெல்கிறது. மூன்று சகோதரர்களில் இரண்டாவதாக பிறந்து, நன்றாக கல்வி கற்று, நல்ல வேலையிலும் அமர்கிறார் இலியச். அவருடைய திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் இன்பமாகக் கழிந்த போதிலும், அவரது மனைவிக்குக் குழந்தை பிறந்த பின்னர், வாழக்கை சதா சண்டையும் சச்சரவும் நிறைந்ததாக மாறிவிடுகிறது. எனவே அதிக நேரம் அலுவலகத்திலேயே கழித்தவராக, சிரிப்பைத் தொலைத்தவராக வாழ்கிறார். மொத்தத்தில் எளிய மனிதராக எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் இலியச்.

இப்படியாக அவரது கடந்த கால வாழ்க்கை அவரது மனக் கண்ணில் விரிந்து கொண்டிருக்கும் போது, அவ்வப்போது உடலில் ஏற்படும் வலியும் அவஸ்தையும் அவரை நிகழ்காலத்திற்கு இழுத்து வருகிறது. இப்படியாக வலியுடனும் நினைவுகளுடனும் போராடிக்கொண்டு தனது இறுதி நாட்களை எதிர்நோக்கி காத்திருக்கிறார் இவான் இலியச். மரணத்தை எதிரியாகக் கருதும் அவர், அதனிடமிருந்து தப்பிவிட ஆசைகொள்கிறார். இருந்தும் நிதர்சனம் அவரது ஆசையை அணையிட்டுத் தடுக்கிறது. எனவே அவர் மனம் உளவியல் சார்ந்தும், தத்துவம் சார்ந்தும் மரணத்தைக் குறித்த பலவற்றை சிந்திக்கிறது.

The syllogism he had learnt from Kiesewetter's Logic: "Caius is a man, men are mortal, therefore Caius is mortal," had always seemed to him correct as applied to Caius, but certainly not as applied to himself. That Caius -- man in the abstract -- was mortal, was perfectly correct, but he was not Caius, not an abstract man, but a creature quite, quite separate from all others. He had been little Vanya, with a mamma and a papa, with Mitya and Volodya, with the toys, a coachman and a nurse, afterwards with Katenka and will all the joys, griefs, and delights of childhood, boyhood, and youth. What did Caius know of the smell of that striped leather ball Vanya had been so fond of? Had Caius kissed his mother's hand like that, and did the silk of her dress rustle so for Caius? Had he rioted like that at school when the pastry was bad? Had Caius been in love like that? Could Caius preside at a session as he did? "Caius really was mortal, and it was right for him to die; but for me, little Vanya, Ivan Ilyich, with all my thoughts and emotions, it's altogether a different matter. It cannot be that I ought to die. That would be too terrible." 

Such was his feeling. 

"If I had to die like Caius I would have known it was so. An inner voice would have told me so, but there was nothing of the sort in me and I and all my friends felt that our case was quite different from that of Caius. And now here it is!" he said to himself. "It can't be. It's impossible! But here it is. How is this? How is one to understand it?"

இவ்வாறாகச் செல்லும் இலியச்சின் சிந்தனைகள் கடைசியில், மரணத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு அவரை இட்டுச் செல்கிறது. தன் கடைசி நாளில், உறவுகள் மீது கொண்டிருந்த வெறுப்பை விட்டொழித்து, எல்லோரையும் மன்னிக்கும் மனப்பாங்கை அடைவதோடு, தனது இல்லாமை தன்னுடைய உறவுகளையாவது சந்தோஷப்படுத்தட்டும் என்று கருதுகிறார். இதுவரை மரணத்தை கடுமையானதாக, எதிரியாக பாவித்த அவர், இப்போது மரணத்தை ஒளியாக, இலகுவானதாகக் காண்கிறார். அவ்வாறு உணர்ந்த தருணத்தில் சட்டென அவரது உயிர் பிரிகிறது.

மரணத்தை நோக்கிக் காத்திருக்கும் ஒரு மனிதனின் மன அவசங்களை இவ்வளவு விரிவாக வேறெந்த கதையும் பேசியதில்லை. உடல் எனும் கூண்டைவிட்டு மனித உயிர் பிரியும் அவஸ்தையின் தருணங்களை தேர்ந்த ஒளிப்பதிவாளராக டால்ஸ்டாய் நம்முடைய மனத்திரையில்  மிக அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளார். வாழ்க்கை, மரணம் இரண்டையும் உளவியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும் இவான் இலியச்சின் பார்வையில் அணுகும் ஓர் அபூர்வமான கதை இது. மரணத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தை நம்முள் விதைத்து, வாழ்க்கை குறித்தும், உறவுகள் குறித்தும் எண்ணற்ற புரிதல்களை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது இந்த ‘இவான் இலியச்சின் மரணம்’.

ஏறக்குறைய அறுபது பக்கங்கள் கொண்ட இந்தக் கதை, வாழ்வு மரணம் என்ற இரு மாறுபட்ட முரண்களை இணைத்ததன் மூலமாக, பெரியதோர் நாவலை வாசித்த உணர்வை நம்முள் ஏற்படுத்துகிறது. மனித வாழ்க்கை என்பது அன்றாடம் நிகழும் மரணத்தைத் தவிர வேறில்லை என்பதை உணரச்செய்து, இறுதியில் காத்திருக்கும் வாழ்வை (மரணத்தை) எதிர்கொள்ளும் மிகப்பெரிய ஆசுவாசத்தை நமக்கு ஏற்படுத்தித் தருகிறது. மரணத்தை வாழ்க்கையின் எதிரியாக கதையின் கடைசிவரையிலும் காணும் நாம், கதையின் கடைசிப் பக்கத்தில் மரணத்தை நண்பனாக கண்டு அதனோடு தோழமை கொள்ளும் விந்தை நிகழ்கிறது. சுருங்கச் சொன்னால், “சாகா வரம் போல் சோகம் உண்டோ? தீராக் கதையைக் கேட்பாருண்டோ?” என்பதை இந்தக் கதை நமக்குப் புரியவைக்கிறது!

டால்ஸ்டாயின் ஆகச்சிறந்த கதையாக சிலாகிக்கப்படும் இந்தக் கதையை அனைவரும் ஒரு முறையேனும் வாசிக்கவேண்டும்.

Related Posts Plugin for WordPress, Blogger...